Translate

Saturday, 28 April 2012

Pensioners above 80 years get double ingrements

தமிழக அரசின் தெளிவுரை கடித எண். 15082 / ஓய்வூதியம் / 2012, நாள். 24.4.2012. 
பணியிலிருந்து ஓய்வு பெற்று அதற்குரிய ஓய்வூதியம் மற்றும் வாழ்க்கை துணை (SPOUSE) இறப்பிற்கு பிறகு பெரும் ஓய்வூதியம் ஆகிய இரண்டு ஒய்வூதியன்களைப் பெறும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ப கூடுதல் ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஓய்வூதியம் என இரண்டு ஒய்வூதியங்களிலும் உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இரண்டு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசின் தெளிவுரை கடித எண். 15082 / ஓய்வூதியம் / 2012, நாள். 24.4.2012.

Saturday, 21 April 2012

முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறைக்கான பயிற்சி மே மாதத்தில் நடைபெறும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. அதே சமயம் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத் (தொலைத்தூர கல்வி)  தேர்வு மற்றும் விடுமுறை காரணங்களுக்காக தள்ளி வைக்க ஆசிரியர்களின் சார்பில் பல்வேறு தரப்பு  அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. 
இது குறித்து மாநில அளவில் முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறைக்கான பயிற்சியில் பங்குபெற்ற ஆசிரியர் ஒருவர் கூறுகையில் ஊராட்சி ஒன்றிய / அரசு பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு மே மாதத்தில் பயிற்சி கிடையாது எனவும், அதே சமயம் மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு மே மாதத்தில் பயிற்சி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி செயலர் பயிற்சி அரங்கில் தெரிவித்தாக கூறினார்.
மேலும் 25.04.2012 அன்று முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறை சம்பந்தமாக அறிமுகப்பயிற்சி  RESOURCE PERSON TRAINING ஒரு நாள் நடைபெறும் என்றும், தொடக்க / அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 1 முதல் 5 வகுப்பு நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு நாள் பயிற்சி 26.04.2012 மற்றும் 27.04.2012 ஆகிய இரண்டு கட்டங்களாக மாநில முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.