Translate

Friday, 21 November 2014

உண்மை ஒரு நாள் வெல்லும் – லிங்கா

உண்மை ஒரு நாள் வெல்லும்.
இந்த உலகம் உன் பெயர் சொல்லும்.
அன்று ஊரே போற்றும் மனிதன்,
நீயே நீயே நீயேடா!
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால்,
உண்மை மெதுவாய் பேசும்!
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே… கலங்காதே… கலங்காதே…
கரையாதே… கலங்காதே… கலங்காதே…
ராமனும் அழுதான்…!
தர்மனும் அழுதான்…!
நீயோ  அழவில்லை,
உனக்கோ அழிவில்லை!
சிரித்து வரும் சிங்கமுண்டு.
புன்னகைக்கும் புலிகள் உண்டு.
உரையாடி உயிர்குடிக்கும்,
ஓநாய்கள் உண்டு!
பொன்னாடை போர்த்து விட்டு,
உன்னாடை அவிழ்ப்பதுண்டு!
பூசெண்டில் ஒளிந்துநிற்கும்,
பூநாகம் உண்டு.
                                    பள்ளத்தில் ஓர்
                               யானை வீழ்ந்தாலும்,
                                    அதன் உள்ளத்தை
                                வீழ்த்திவிட முடியாது!

உண்மை ஒரு நாள்…..
சுட்டாலும் சங்கு நிறம்
எப்பொதும் வெள்ளையடா,
மேன்மக்கள் எந்நாளும்
மேன்மக்கள் தானே!
கெட்டாலும் நம் தலைவன்
எப்போதும் ராஜனடா!
வீழ்ந்தாலும் வள்ளல் கரம்
வீழாது தானே!
பொன்னோடு மண் எல்லாம் போனாலும் அவன் புன்னகையை  
கொள்ளை யிட முடியாது!
உண்மை ஒருநாள்….

---பாடல்: உண்மை ஒரு நாள் வெல்லும். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்: ஹரிசரண் படம்: லிங்கா


Saturday, 1 November 2014

Kalvikoodal.com: இதயத்தைக்காக்கும் காளான் -Mushroom Saves our life ...

Kalvikoodal.com: இதயத்தைக்காக்கும் காளான் -Mushroom Saves our life ...: காளானின்  மருத்துவ குணங்கள்:        மற்ற காய்கறிகளில் பெற முடியாத  உயிர்ச்சத்தான ,   உயிர்ச்சத்து-  D  காளானில் அதிகமாகவு...

Friday, 31 October 2014

Kalvikoodal.com: இருவாய்ச்சி-என்னும் இருவாட்சி.....[Horn bill]...ஓர...

Kalvikoodal.com: இருவாய்ச்சி-என்னும் இருவாட்சி.....[Horn bill]...ஓர...:       இருவாட்சி  என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். ஆங்கிலத்தில் இக்குடும்பத்தை "ஹார்ன்பில்"  Horn bill  என அழை...

Tuesday, 28 October 2014

நரைக்கு போடாதீங்க திரை!


தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு, அவர் தலைக்குப் பயன்படுத்திய சாயமும் ஒரு முக்கியக் காரணம் என்கின்றன மீடியாக்கள். 'தலைக்கு அடித்த சாயமே தலைவரை சாச்சிடுச்சே!’ என்று தொண்டர்களும் சோகத்தில் உறைந்து போயிருக்கின்றனர். தலைக்கு அடிக்கும் 'டை’ அந்த அளவுக்கு ஆபத்தானதா? தோல் சிகிச்சை நிபுணரும், காஸ்மெட்டாலஜிஸ்ட்டுமான டாக்டர் மாயா வேதமூர்த்தியும், ஹோமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமனும் இதுகுறித்து விரிவாக விளக்கினார்கள்.   
''அழகு நிலையங்களுக்கு சரும அழகுக்காக செல்பவர்களைவிட, தலைக்குச் சாயம் பூசச் செல்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.  தலைக்குப் பூசும் சாயத்தில் தற்காலிகம், ஓரளவு நிரந்தரம், நிரந்தரம் என மூன்று வகைகள் உண்டு.  தற்காலிகம் மற்றும் ஓரளவு நிரந்தரச் சாயம் 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நிலைக்கும். ஆனால், நிரந்தரச் சாயம் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும்.  இதில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது நிரந்தர சாயத்தைதான்'' என்கிற மாயா, சாயத்தில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களைப் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சொன்னார்.  
''இயற்கையான மருதாணி இலைகளை அறைத்துப் பூசுவதால் எந்த பாதிப்பும் நேராது. அதேபோல அம்மோனியா கலவை இல்லாத - பிபிடி 2.5 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ள - தலைச்சாயத்தையும் பயன்படுத்தலாம். பேட்ச் டெஸ்ட் என்ற பெயரில் கை, கால், காதுக்கு பின்புறம் ஒரு துளி டையைப் போட்டு, அரிப்பு, தடிப்பு போன்ற எந்தப் பிரச்னைகளும் இல்லை என்றால், டை போட்டுக் கொள்ளலாம். இப்படிப் பரிசோதித்து டை அடிப்பதன் மூலம் ஓரளவு பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.
தலைக்கு அடிக்கும் டை பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். காரணம், சாயங்களில் ஆக்சிடைசிங் ஏஜென்ட் (Oxidizing agent), பிபிடி என்ற பாராபினைலின் டை அமின் (Para-Phenylenediamine), ரெசார்சினால் (Resorcinol), அம்மோனியா (Ammonia), ஹைட்ரஜன் பராக்சைடு (Hydrogen peroxide)போன்ற மிகத் தீவிர ரசாயனப் பொருட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன. இந்த ரசாயனப் பொருட்கள் அனைத்துமே உடலுக்குத் தீங்கு செய்பவை.
இது போன்ற சாயத்தைத் தலையில் போட்டவுடன் சிலருக்குப் பிரச்னை வரலாம். சிலருக்குச் சில நாட்கள் கழித்து பாதிப்பு தென்படலாம். இந்தப் பாதிப்பு தோலில் அரிப்பு, தடிப்பு ஏற்படுத்தி, தலையில் எரிச்சல், தலைமுடி உதிர்தல், முடியில் பிளவு ஏற்படுதல், தலையில் செதில் செதிலாகத் தோல் உதிர்தல் நேரிடலாம்.   கொப்புளங்கள் போன்றவையும் உருவாகக்கூடும். இதுவே, அனஃபைலசிஸ்(Anaphylaxis) என்ற கடுமையான அலர்ஜியை உண்டு பண்ணும்.  
இதனால் மூச்சுத் திணறல் அதிகமாகி, நுரையீரல் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய அளவுக்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பாராபினைலின்டைஅமின் வாசமே சிலருக்கு ஆஸ்துமா, தீவிர சளி போன்றவைகளை உருவாக்கும்.
மேலும் தொடர்ந்து தலைச் சாயம் பயன்படுத்தும்போது, தலைமுடியின் வளர்ச்சி முழுவதுமாக பாதிக்கப்படுவதுடன், சாயத்தில் உள்ள ரசாயனம் உடலில் சென்று ரத்தத்துடன் கலந்து, சிறுநீரகம் வழியாக வெளியேறும்.      
ஒவ்வொருவரின் உடல்நிலைக்கேற்ப, ஒவ்வொருவிதமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து, ரத்தப் புற்றுநோய், நீர்ப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என்று பல பிரச்னைகளுக்கு வழி வகுத்துவிடும். கண்ணில் பட்டால், இளம் வயதிலேயே கண்புரை வருவதுடன், கண்பார்வை இழப்புகூட நேரலாம். ஆகையால் நிச்சயம் தேவை எச்சரிக்கை'' என்று உஷார்படுத்தினார் டாக்டர் மாயா வேதமூர்த்தி.  
''இயற்கையோடு இணைந்தாலே... இல்லை வியாதி'' என்று சொல்லும் ஹோமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன் தலைக்குச் சாயம் பூசுவதைப் பற்றி தெளிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
''இன்று சமூகத்தில் எல்லா விஷயங்களுமே கலப்படம் தலைவிரித்தாடுகிறது. தலைச்சாயமும் இதற்கு விலக்கல்ல. தலைமுடிக்குச் சாயம் போடுவதினால் வெளித்தோற்றத்திற்கு அழகாகத் தெரிந்தாலும் உடலுக்குப் பல்வேறு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.  
நரை முடி வயதின், அனுபவத்தின் வெளிப்பாடு.  இது வெட்கப்படவேண்டிய விஷயம் இல்லை.  வயதுக்குரிய மரியாதையை, மதிப்பைப் பெற்றுத் தரக்கூடிய விஷயம்.    
பெண்களுக்கு, 45 வயதில் மெனோபாஸ் வருகிறது எதனால் என்றால், இதற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம்... கஷ்டம் என்று இயற்கையே நிறுத்துவதாகத்தான் அர்த்தம்.  இயற்கையை மீறிக் குழந்தை பெற்றுக் கொண்டால், அது தாய்க்கு மட்டும் அல்ல, பிறக்கும் குழந்தைக்கும் சிக்கலை ஏற்படுத்திவிடும்!'' - எச்சரிக்கும் வெங்கட்ராமன் ''கறை படியாத நரையே அழகு'' என்கிறார் நெற்றியடியாக.
''தலை எழுதும் சுயசரிதை... அதில் அன்பே ஆனந்தம்!'' என நரையைப் பார்த்துச் சிலிர்த்தார் வைரமுத்து.
நாமும் நரையைப் பார்த்து அப்படியே சிலிர்க்கச் செய்யலாம்... இல்லையேல் பாதுகாப்பான டை எது என்பதைச் சரியாகக் கண்டறிந்து நரை போக்குவதே நலம்!

போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்

போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு?  எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி தாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள்.
முதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் பரவி எண்ணற்றோர் இறந்து போனார்கள். இரண்டாம் உலகப்போர் வரவே மீண்டும் அப்படி நோய் ஏற்படலாம் என்று பல மில்லியன் டாலர்களை அது சார்ந்த ஆய்வுக்கு அமெரிக்க அரசு கொட்டியது. சால்க் அதே சமயத்தில் வைரஸ்களை கொல்லாமலே அவற்றை செயலிழக்க வைத்து அதன் மூலம் அவற்றையே நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அரசின் ஊக்கம் அவரை இன்னமும்
வேகப்படுத்தியது.
உலகம் முழுக்க இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். அதில் தொன்னூறு சதவிகிதம் பேர் பால் மணம் மாறாத சிறுவர்கள். அமெரிக்காவில் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு முறை நோய் தாக்கினால் பின்னர் அதில் ஏற்படும்
பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அளவுக்கு கொடுமையான வியாதி இது.
பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் சால்க். பெரும்பாலும் செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ்களை கொண்டே சிகிச்சை தரப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். ஜான் எண்ட்லர் ஆய்வுக்கு தேவையான் தூய்மையான போலியோ வைரஸ்களை உருவாக்குவதில் வெற்றி கண்டிருந்தார்.  சால்க் பார்மல்டிஹைடை கொண்டு போலியோ கிருமிகளை கொன்றார். முதலில் குரங்குகளில் கொல்லப்பட்ட வைரஸ்களை கொண்ட மருந்தை சோதித்து பார்த்த பின்பு,தாங்களே மருந்தை செலுத்திப்பார்த்தார்கள்.
யாருக்கும் எந்த தீங்கும் உண்டாகாமல் இருக்கவே நாடு முழுக்க ஐந்து லட்சம் பிள்ளைகளிடம் இந்த மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்பு மருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. மருந்து
கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் ஐந்தே வருடங்களில் இந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது.
சால்க்கின் தடுப்பு மருந்துக்கு அவரை காப்புரிமை பெற சொல்லி உடனிருந்தவர்கள் அறிவுரை சொன்னார்கள். பல கோடி டாலர்களை அவர் அதன் மூலம் ஈட்டியிருக்க முடியும். சால்க் என்ன சொன்னார் தெரியுமா ? "என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா ? சொல்லுங்கள் ?". அத்தகு அரிய மனிதரை நினைவு கூர்வோம். போலியோ தடுப்பு மருந்து இன்றைய தினம் தான் முதன்முதலில் அமெரிக்காவில் பெருமளவில் சோதிக்கப்பட்டது.

Kalvikoodal.com: எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியாளர்களின் பர...

Kalvikoodal.com: எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியாளர்களின் பர...: *செவிலியர்கள் வாடகை வீடுகளிலிருந்து            வெளியேற்றப்பட்டனர்.   *குடும்ப உறுப்பினர்கள் ,நண்பர்கள் இவர்களை தவிர்க்கின்றனர்.   ...

Monday, 27 October 2014

Kalvikoodal.com: பூனைக் கண்காட்சி பராகுவேயில் -World's biggest cat ...

Kalvikoodal.com: பூனைக் கண்காட்சி பராகுவேயில் -World's biggest cat ...: நாய்க்கண்காட்சி தான் கேள்விபட்டிருப்போம் ஆனால் இங்கே  பூனைக்  கண்காட்சி பராகுவேயில்       Some of the fanciest felines on the ...

Tuesday, 21 October 2014

ஆல்பிரெட் நோபல் பிறந்த தின சிறப்பு பகிர்வு

அறிவியலாளர், நோபல் பரிசு நிறுவனருமான ஆல்பிரட் நோபல் பிறந்த தினம் அக்டோபர் 21; 1833

ஆல்பிரெட் நோபலினின் தந்தை இம்மானுவேல் புகழ் பெற்ற பொறியியலாளர். ஸ்டோக்ஹோம் நகரத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அவர் வறுமையின் காரணமாக ரஷ்யா நோக்கி நகர்ந்தார். அங்கே போர் நடக்கும் சமயங்களில் உபயோகப்படுத்தும் வகையில் கன்பவுடரைப் பயன்படுத்தினார். ஆனாலும் போர் முடிந்தபின் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டார்; அவரின் பிள்ளையான ஆல்பிரெட் நோபலோ கவிதை, இலக்கியம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தார்.



மகனின் ஆர்வத்தை அதிர்ந்த தந்தை ஏற்கனவே வேதி பொறியியல் படித்திருந்த மகனை பாரிஸில் புகழ் பெற்ற ஒரு வேதியியல் நிபுணரிடம் அனுப்பினார்; அங்கேதான் நைட்ரோ க்ளிசரனை பார்த்தார்; அது வெடிமருந்து பவுடரை மாதிரி பலமடங்கு ஆற்றல் மிகுந்து இருந்தது, எனினும் அது கொஞ்சம் அழுத்தம், வெப்பம் மாற்றங்களில் கூடவெடித்து விடும் தன்மை கொண்டிருந்தது.

அதை எல்லாரும் பயன்படுத்தும் வகையில் மாற்றும் ஆய்வில் ஈடுபட்டார் மனிதர். இதில் தன் தம்பியையே ஒரு வெடிவிபத்தில் இழந்தார். அப்பொழுது 'மரணத்தின் வியாபாரி ஆல்பிரெட் நோபல் மரணம்!' என்று பிரெஞ்சு இதழ்கள் தலைப்பு செய்தி வாசிக்க அதிர்ந்தார் அவர். ஆல்பிரெட் நோபல் ஸ்டா க்ஹோமில் ஆய்வு செய்ய அரசு தடை விதித்தது.

இறுதியில் அவர்கள் நாட்டில் கிடைக்கும் கேய்சல்கர் எனும் களிமண்ணை கலந்து டைனமைட்டை உருவாக்கினார், அது மிகப்பெரிய அளவில் கட்டிடங்கள், பாலங்கள் கட்டப் பயன்பட்டது. ஆனால் அதையே போரில் பயன்படுத்தி பல உயிர்களைக் குடிக்க ஆரம்பித்தன ராணுவம், உலகின் அமைதிக்கு பெரிய தீங்கு விளைத்து விட்டோம் என்கிற குற்ற உணர்வோடு அவர் நாற்பத்தி மூன்று வயதிலேயே நொந்து போய் முடங்கிப்போனார் .

ஆல்பிரட் நோபல் உதவியாக பெர்த்தா என்கிற பெண் செயலராக வந்தது அவர் வாழ்வில் பெரிய மாற்றம். அவரின் பாவத்துக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார் பெர்த்தா. உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என ஒரு நூலையும் எழுதினார். பின் நோபலை விட்டு பிரிந்து திருமணம் செய்துகொண்டு அவர் வெளியேறிவிட்டாலும் அவரின் தாக்கத்தில் நோபல் தனிமையில் தன்னால் ஏற்பட்ட அழிவிற்கு பிராயசித்தம் தேட யோசித்ததன் விளைவு அவரின் உயிலில் கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள அவரின் சொத்தில் இருந்து வரும் வட்டியில் வருடாவருடம் அமைதி அறிவியல் உலக முன்னேற்றம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு தருபவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என அவர் அறிவித்து விட்டு போனதன் விளைவாக உண்டானதே நோபல் பரிசு.

இலக்கியம்,இயற்பியல், வேதியியல் மருத்துவம் . உலக அமைதி பொருளாதாரம் ஆகியத்துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

* நோபல் பரிசு சில துளிகள்... *

* நோபல் பரிசு மற்றும் ஆஸ்கர் விருது இரண்டையும் பெற்றவர் பெர்னார்ட் ஷா.

* நோபல் பரிசு உருவாக்கப்பட்ட பொழுது பொருளாதாரத்துக்கு பரிசு நோபலின் உயிலில் குறிக்கப்படவில்லை ;1968 ஆம் ஆண்டில் இருந்தே அப்பரிசு வழங்கப்படுகிறது.

* ஹிட்லர் தன் காலத்தில் தன் நாட்டவர் மூவர் நோபல் பரிசை பெறுவதை தடுத்து இருக்கிறார் ;அவர் மறைந்த பின் அப்பரிசை அவர்கள் பெற்றுக்கொண்டாலும் பணம் கொடுக்கப்படாமல் போனது ;ஒன்லி பதக்கம் என கறாராக சொல்லிவிட்டது கமிட்டி.

* நோபல் அமைதி பரிசு காந்திக்கு வழங்கப்பட்டதே இல்லை ;அவருக்கு 1948 இல் வழங்க நியமனம் செய்யப்பட்ட சில நாட்களில் கொல்லப்பட்டதால் அப்பரிசு அவருக்கு மரியாதையை செலுத்தும் வகையில் அவ்வருடம் மட்டும் கொடுக்கபடாமலே போனதாக சொல்லப்படுவதுண்டு .காந்திக்கு பரிசு கொடுக்கப்படாமல் போனதற்கு பகிரங்க மனிப்பு கேட்டது நோபல் கமிட்டி.

நோபல் பரிசின் மூலம் பெறப்பட்ட நிதி மற்றும் விருந்துக்கான பணத்தையும் முழுக்க பெற்று அதையும் சமுக சேவைகளுக்கு செலவிட்டார் அன்னை தெரசா.

* இறந்தவர்களுக்கு பெரும்பாலும் நோபல் பரிசுகள் வழங்கப்படுவதில்லை ;2011 இல் ஒரு கூத்து நடந்தது .மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ஸ்டெய்ன்மென் அதற்கு மூன்று நாட்கள் முன்னமே மரணம் அடைந்து இருந்தார். இது தெரியாமலே பரிசை அறிவித்து விட்டனர் .ஆனால்,அப்பரிசை திரும்பபெறவில்லை கமிட்டி.

- பூ.கொ. சரவணன்