Translate

Monday, 7 May 2012

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற கிராமத்து விவசாயி மகள் | Kalvimalar - News

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற கிராமத்து விவசாயி மகள் | Kalvimalar - News



சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற கிராமத்து விவசாயி மகள்



தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மகள், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
பெரியகுளம் லட்சுமிபுரத்தை சேர்ந்த விவசாயி தனசேகரன். இவரது மகள் ரேவதி, 24. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். பின்னர் கோவை பி.எஸ்.ஜி., கல்லூரியில் பி.இ., சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். தற்போது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
அவர் கூறியதாவது:

 சிவில் சர்வீஸ் தேர்வில், 742வது இடம் கிடைத்துள்ளது. சிறுவயதில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம். இதற்காக என் குடும்பத்தினர் உதவி புரிந்தனர். தற்போது, தேர்வில் வெற்றி பெற்றதால், ஐ.ஆர்.எஸ்., போன்ற மற்ற பணிகளுக்கு செல்லாம். இருப்பினும் மீண்டும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்.,தேர்ச்சி பெறுவேன் என்றார்.

அரசு பள்ளி மாணவர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி

அரசு பள்ளி மாணவர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி  


பட்டுக்கோட்டை தாலுக்காவில் அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற பாலமுரளிக்கு ஆசிரியர்கள், முன்னாள் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பட்டுக்கோட்டை தாலுக்கா பொன்னவராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் மகன் பாலமுரளி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல்முறையே தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை தேவேந்திரன் ஓய்வுபெற்ற அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆவார். தாய் அல்லிக்கொடி, சகோதரி ரம்யா. இவர், பல் டாக்டராக பணிபுரிகிறார். பாலமுரளியின் அண்ணன் உமாசங்கர் விவசாயம் செய்து வருகிறார்.
ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற பாலமுரளி, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி.,யும், நாட்டுச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2வும் படித்தார். இதைத்தொடர்ந்து பிடெக் படிப்பை காரைக்குடி சி.இ.சி.ஆர்.ஐ., கல்லூரியிலும் முடித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே பாலமுரளி தேர்ச்சி பெற்று ஐ.ஆர்.பி.எஸ்., ஆக தற்போது வதோராவில் பயிற்சி பெற்று வருகிறார். இவரது படிப்பு துவக்கம் முதலே அரசு பள்ளிகளில் தமிழ்வழி மூலமே கல்வி கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் பெற்ற பாலமுரளிக்கு ஆசிரியர்கள், முன்னாள் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

kalvikoodal: பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர்கள் கோர...

kalvikoodal: பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர்கள் கோர...: பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை-07-05-2012               சென்னை: "பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் ...

kalvikoodal: பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர்கள் கோர...

kalvikoodal: பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர்கள் கோர...: பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை-07-05-2012               சென்னை: "பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் ...