Translate

Sunday, 26 August 2012

அமெரிக்காவில் அரசுப் பள்ளிகள்தாம் சிறப்பாக இருக்கும்!

அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி  (மானுடவியல்)


படித்து வரும் மாணவி எலினார். இவர் தனது படிப்பின் ஆராய்ச்சிக்காக கிராம மக்களின் வாழ்க்கை, கலாசாரத்தை அறிந்துகொள்ள கடந்த 10 மாதங்களுக்கு முன் மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்துக்கு வந்து ஓவியம் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான குழும வீட்டில் தங்கினார். இவருக்கு ஆறுமுகத்தின் மகள் எம்.எஸ்சி படித்த ராஜேஸ்வரி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல வகைகளில் வழிகாட்டுதலாக இருந்து வருகிறார்.  மானுடவியல் பாடத்தில் மக்கள் கிராம தெய்வங்களை வழிபடுவது, திருமணங்கள் நடத்துவது குறித்தும், கோயில் திருவிழாக்கள் கலாசார முறைகளையும் தனது ஆய்வுக்காக ஊன்றிக் கவனித்து வருகிறார் மாணவி எலினார்.    மேலப்பசலை கிராம மக்களிடத்தில் மாணவி எலினார் அன்பாகப் பழகி வருவதால், கிராம மக்களும் இவரிடம் மிகுந்த அன்பு செலுத்தி வருகின்றனர்.  கிராம மக்களுடன் சேர்ந்து வயல்வெளிகளில் வேலை செய்வது, வீட்டில் சமையல் வேலை செய்வது, கிராம மக்களுடன் சேர்ந்து திரையரங்குக்குச் சென்று சினிமா பார்ப்பது போன்றவற்றையும் தனது ஆராய்ச்சி படிப்புடன் எலினார் மேற்கொண்டுவருகிறார்.  மேலும், பெண்கள் வயல் வேலைகளுக்குச் சென்றால் அவர்களுடன் சென்று வயலில் நாற்று நடுவது, களை எடுப்பது போன்ற வேலைகளையும் செய்து வருகிறார். கிராமத்து வாழ்க்கையை ரசித்தபடி அனுபவித்துவரும் எலியனார் நம்மிடம் பேசியதிலிருந்து...  ""நான் பிரிட்டனில் முதுகலைப் படிப்புப் படித்தேன். தற்போது மானுடவியல் ஆராய்ச்சி படிப்புக்காக மேலப்பசலை கிராமத்தில் வந்து தங்கியிருந்து, படிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்து வருகிறேன்.  படிப்புக்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளேன். எனது படிப்புக்கு அமெரிக்கா, இந்திய அரசாங்கங்கள் உதவி செய்து வருகின்றன. நான் மேலப்பசலை அருகேயுள்ள கரிசல்குளம் கிராமங்களில் நடக்கும் திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றுக்கு நேரிடையாகச் சென்று, ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொண்டுள்ளேன்.  இது எனது ஆராய்ச்சிப் படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  படிப்பு என்பது வாழ்க்கையில் முக்கியமானதாகும். அமெரிக்க கல்வி முறையானது படித்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறையில் இல்லை. ஆனால், இந்தியாவில் படிக்கும் பாடத்திலிருந்து கேள்வி - பதில்களை மனப்பாடம் செய்து, அதையே பதிலாக எழுதுகிறார்கள். இந்த படிப்பு முறை வாழ்க்கைக்கு உகந்ததல்ல. படிக்கும் பாடத்திலிருந்து சொந்தமாகப் பதில் எழுத வேண்டும்.  அமெரிக்காவில் அரசுப் பள்ளிகள் தான் சிறப்பானதாக இருக்கும். வீடுகளுக்கு அருகேயுள்ள பள்ளிகளில்தான் சேர்ந்து படிக்க வேண்டும். ஒரு வகுப்புக்கு 30 மாணவர்கள்தான் இருப்பார்கள். பள்ளிகளில் விளையாட்டு, உடற்பயிற்சி முக்கியப் பாடங்களாக இருக்கும்.  தமிழகத்தில் விளையாட்டுக் கல்வி முறையும் படிப்பும் மாணவர்களை முன்னேற்றும் விதத்தில் இல்லை. இரவானால் இங்கு பெண்கள் வெளியில் செல்லத் தயங்குகிறார்கள். அமெரிக்காவில் இரவில் வெளியில் செல்ல பயம் கிடையாது.  திருமணத்துக்காக இங்கு போல் வரதட்சிணை வாங்கும் பழக்கம் எங்கள் நாட்டில் இல்லை'' என்றார்.  இவருக்கு உதவியாக உள்ள மேலப்பசலை ராஜேஸ்வரி, ""எலினார் தன்னம்பிக்கையுடன் சுறுசுறுப்பாக உள்ளார். எந்த நேரமாக இருந்தாலும் எங்கும் செல்லும் தைரியம் இவரிடம் உள்ளது.  மேலப்பசலை கிராம மக்களின் அன்பைப் பெற்றுள்ள இவர், சிறுவர்களுடன் விளையாடுவது இளைஞர்களுடன் சகஜமாக பேசி பழகுவது பெண்களுடன் சேர்ந்து வயலுக்கு நாற்று நடவும் களை எடுக்கவும்கூட செய்கிறார். இதெல்லாம் இவரது சிறப்பாகும்.  இவர் மேலப்பசலைக்கு வந்த பின்னர், இவரது பெற்றோர் ஒருமுறை இங்கு வந்து சென்றுள்ளனர்''  என்றார்.   
                                                                          COURTESY-DINAMANI

Neil Armstrong, First Man on the Moon, Dies at 82 --INDIA"S GRATE SALUTE TO HIM

image: Neil A. Armstrong inside the Lunar Module of Apollo 11 while on the lunar surface, July 20, 1969.
CINCINNATI (AP) — Neil Armstrong was a quiet self-described nerdy engineer who became a global hero when as a steely-nerved pilot he made “one giant leap for mankind” with a small step on to the moon. The modest man who had people on Earth entranced and awed from almost a quarter million miles away has died. He was 82.
Armstrong died following complications resulting from cardiovascular procedures, a statement Saturday from his family said. It didn’t say where he died.
Armstrong commanded the Apollo 11 spacecraft that landed on the moon July 20, 1969, capping the most daring of the 20th century’s scientific expeditions. His first words after setting foot on the surface are etched in history books and the memories of those who heard them in a live broadcast.
                                                                     COURTESY TIME

Saturday, 25 August 2012

டெட் தேர்ச்சி பெறாதவர்கள் அக்டோபர் 3ல் எழுதலாம்

சென்னை: ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், 1% பேர் கூட தேர்ச்சி பெறவில்லை. எனவே, தோல்வியடைந்தவர்களுக்கான மறுதேர்வு அக்டோபர் 3ம் தேதி நடைபெறவுள்ளது.
மொத்தம் 676773 பேர் பங்கேற்றதில், 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, போதுமான ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வு, அக்டோபர் 3ம் தேதி நடைபெறவுள்ளது. ஜுலை 12ம் தேதி தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள் மட்டுமே இந்த மறுதேர்வை எழுத முடியும். அதேசமயம், இதற்காக மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வில், 30 நிமிட நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விபரங்களை அறிய www.trb.tn.nic.in என்ற இணையதளம் செல்க.

Friday, 24 August 2012

உதவி தொடக்க கல்வி அலுவலர் வீட்டில் ரெய்டு

ஓசூர்: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீடு, அவரது மாமனார் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை, அதிரடி சோதனை நடத்தினர். கல்வித்துறை நிதியை மோசடி செய்தும், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்தும், சேர்க்கப்பட்ட, 46 சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
ஓசூர், உழவர் சந்தை, நியூ டெம்பிள் லேண்ட் ஹட்கோ பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். வேலூர் மாவட்டம், கனியம்பாடி உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், கல்வித்துறை நிதிகளை மோசடி செய்து, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், ஆசிரியர்களுக்கு இட மாறுதல், பணி நியமனம் பெற்று தருவதாக, பணம் பெற்றதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில், ஒரு குழுவினர், ஓசூரில் உள்ள வெங்கடேசன் வீட்டிலும், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில், மற்றொரு குழுவினர், சூளகிரியில் உள்ள, அவரது மாமனார் ஆஞ்சப்பா வீட்டிலும், நேற்று அதிகாலை, ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். ஓசூர் வீட்டில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 41 சொத்துகளின் ஆவணங்களையும், சூளகிரியில், ஆஞ்சப்பா வீட்டில் இருந்த, வங்கி ஆவணங்களையும் கைப்பற்றினர்.
டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறுகையில், தனியார் சந்தை விலை அடிப்படையில், கைப்பற்றப்பட்ட சொத்துகளை மதிப்பிடும்போது, வெங்கடேசன் வருமானத்துக்கு அதிகமாகவும், சட்டத்துக்கு விரோதமாகவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை சேர்த்துள்ளதை உறுதி செய்துள்ளோம். அவர் மீது, துறைவாரியாக மேல்நடவடிக்கை எடுக்க, பரிந்துரை செய்வோம் என்றார்.

Thursday, 23 August 2012

பள்ளி மாணவ, மாணவியருக்கு விளையாட்டு ஊக்கத்தொகை


சென்னை: விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு, ஊக்க உதவித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித் தொகை திட்டத்தில், உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளி விளையாட்டு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும்; கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு ஜூலை 1 முதல், இந்தாண்டு ஜூன் 30 வரை நடந்த விளையாட்டுகளில் வெற்றி பெற்றோர் மட்டுமே, இதற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டுக் கழகங்கள், இந்திய விளையாட்டுக் குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளிலும், வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலரிடம், 10 ரூபாயை செலுத்தி, இதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். இம்மாதம், 31ம் தேதிக்குள், மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகியவற்றுடன், விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5ம் தேதி, ஆண்டுதோறும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன.
கடந்த ஆண்டிற்கான, தேசிய நல்லாசிரியர் விருது, தமிழகத்தைச் சேர்ந்த துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், 15 பேர், பள்ளி கல்வித் துறை ஆசிரியர்கள், ஏழு பேர் என, மொத்தம், 22 பேருக்கு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி, ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.

Wednesday, 22 August 2012

kalvikoodal.com: இரட்டை பட்டம் குறித்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப...

kalvikoodal.com: இரட்டை பட்டம் குறித்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப...:       84.In  view of the above, the writ petitions are allowed and the official respondents are directed not to recognize, both for appoint...

2030ல் இந்திய பல்கலை.,களில் 40 கோடி மாணவர்கள்

 இந்தியாவில் மேற்படிப்பைத் தேர்வு செய்யும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், மேற்படிப்பைத் தேர்வு செய்பவர்களின் சதவிகிதம் கடந்த 4 ஆண்டுகளில் 12.4 சதவீதத்தில் இருந்து 20.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 40 கோடியை எட்டிவிடும் என்று தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு இணையானதாக இருக்கும் என்றார்.
எனினும், இந்த அளவு மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு தற்போதுள்ளதை விட கூடுதலாக 800 பல்கலைக்கழகங்களும், 50 ஆயிரம் கல்லூரிகளும் தேவைப்படும் எனத் தெரிவித்த அவர், இவற்றை உருவாக்குவதில் ஒரு ஆண்டு தாமதம் ஏற்பட்டாலும், பல மாணவர்களின் மேற்படிப்பு பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Tuesday, 21 August 2012

டி.ஆர்.பி. தேர்வுப் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வரும் தேர்வுப் பணிகள், தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.
பள்ளி, கல்லூரி ஆசிரியர் தேர்வு, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கான ஆசிரியர் தேர்வு போன்றவற்றை, டி.ஆர்.பி., நடத்தி வருகிறது. அனைத்து பணியிடங்களுக்கும், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட துறைகளிடம் தேர்வுப் பட்டியலை ஒப்படைக்கும் பணியை, டி.ஆர்.பி., செய்கிறது.
தேர்வுப் பணிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக, அதில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அதன்படி, தேர்வுப் பணிகளில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக, அதை தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், ஒப்பந்த அடிப்படையில் வழங்க, "டெண்டர்&' விளம்பரம் வெளியிட்டுள்ளது.
ஸ்கேனிங், பிரின்ட்டிங், தகவல் தொகுப்பு நிர்வாகம் மற்றும் தேர்வுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நிறுவனத்திடம், முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டும் பணி வழங்கப்படும்.
அந்த நிறுவனத்தின் சேவையில் திருப்தி ஏற்பட்டால், ஒப்பந்தம் மேற்கொண்டு நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் நிறுவனம், தேர்வுப் பணிகளுக்கு தேவையான அனைத்து மின்னணு சாதனங்கள் மற்றும் தேவையான பணியாளரை நியமனம் செய்ய வேண்டும்.
ஸ்கேனிங், பிரின்ட்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும், டி.ஆர்.பி., இடத்தில் நடக்கும் எனவும், தேர்வு செய்யப்படும் நிறுவனம், திங்கள் முதல், சனிக்கிழமை வரை, தினமும் காலை, 9 முதல், மாலை 6 மணி வரை, வேலை செய்ய வேண்டும் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள சம்பத் மாளிகையில், நான்காவது தளத்தில், டி.ஆர்.பி., இயங்கி வருகிறது. இந்த தளத்தில் போதிய இட வசதி இல்லை. ஆறாவது மற்றும் எட்டாவது தளத்தில் இயங்கி வந்த, விளையாட்டு பல்கலை அலுவலகம், தரமணிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இரு தளங்களையும், டி.ஆர்.பி., எடுத்துக் கொண்டது.
இந்த தளங்களில், தேர்வு செய்யப்படும் சேவை நிறுவனத்தின் அலுவலகம் அமைய, அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தேர்வுப் பணிகளுக்கான தகவல் தொழில்நுட்பப் பணிகளை, தற்போது, தனியார் நிறுவனம் ஒன்று வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக சேவை வழங்கி வரும் நிலையில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில், புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தற்போது, "டெண்டர்&' கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவை தெரிவித்தன.

1,200 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் காலி

         மதுரை: அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் நியமிக்கப்பட்ட, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், பல்வேறு காரணங்களால் 1200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், இந்தாண்டு துவக்கத்தில் ரூ.5 ஆயிரம் மாத சம்பளம் அடிப்படையில் கணினி, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் இதுவரை மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. பணி கிடைத்த பள்ளிகள் தொலைவாக இருந்தது, வேறு பள்ளிக்கு மாற்றம் கேட்டு கிடைக்காத காரணத்தால் தேர்வான ஆசிரியர்கள் இன்னும் பணியில் சேராமல் இருப்பது, பகுதி நேர ஆசிரியர்களாக தேர்வு பெற்ற பின் வேறு வேலைகள் கிடைத்து சென்றது போன்ற காரணங்களால் மாநிலம் முழுவதும் இன்னும் சுமார் 1,200 பணியிடங்கள் வரை காலியாக உள்ளதாக அனைவருக்கும் கல்வி திட்டம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்பணியிடங்களை தகுதியுள்ள ஆசிரியர்கள் மூலம் நிரப்ப தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கு இரண்டாவது முறையாக அழைப்பு விடுப்பதா? அல்லது தகுதி அடிப்படையில் புதியவர்களை தேர்வு செய்வதா? என்று கல்வி துறை அதிகாரிகள் பரிசீலனை நடத்தி வருகின்றனர்.
எந்த வகையிலாவது காலியாக உள்ள இடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களை விரைவில் நியமித்து கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தகுதியுள்ள ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

                                                                                                                      COURTESY-DINAMALAR

Sunday, 19 August 2012

Clarification about Personal Pay regarding

தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதங்கள்,2009 - இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.500/- சிறப்புபடிக்கு மாற்றாக ரூ.750/- தனி ஊதியம் 01-01-2011 முதல் அனுமதித்து ஆணையிடப்பட்டது - தனி ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரைகள் வழங்கக் கோரல் - தொடர்பாக.

DWONLOAD LINK 
             
  Letter No. 8764 
April 18, 2012    

எது - எங்கே - எப்படி?

              படிப்பா? கல்வி நிறுவனமா? சுய விருப்பமா? வேலை வாய்ப்பா? உள்ளூரிலேயே படிப்பதா அல்லது வெளிநாடு செல்வதா? இதுபோன்ற கேள்விகளை தமக்குள் போட்டு குடைந்துகொள்ளும் மாணவர்கள் இன்று ஏராளம். ஆனால் இதுபோன்ற கேள்விகளுக்கு நேரடி பதில் இல்லை என்றே கூறலாம்.
இன்றைய உலகில், ஒரு தனிப்பட்ட நபர் தனது 30 முதல் 40 வருட பணி வாழ்க்கையில், குறைந்தது 3 முதல் 4 வெவ்வேறான தொழில்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒருவருக்கு புதிய விஷயங்களை விரைவாக கற்றுக்கொள்ளும் திறனும், திறன் மாற்றுத் தன்மைகளும் அவசியம் தேவைப்படுகின்றன.
உயர்கல்வியில், எந்தப் படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில், உங்களுக்குள் ஒரு போராட்டமே நடக்கும். அந்த சூழலில், உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை உடனடியாக நிராகரித்து விடுங்கள்.
கல்லூரியா - படிப்பா? எது முக்கியம்?
ஒரு பெயர்பெற்ற கல்லூரியில் இடம் கிடைக்கிறது என்பதற்காக, ஏதோ ஒரு விரும்பாத பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதா? அல்லது மிகவும் விரும்பும் ஒரு படிப்பை, அது சாதாரண கல்லூரியில் கிடைத்தாலும், அதில் சேர்ந்து படிப்பதா? என்ற பெரிய குழப்பம் ஏற்படும்.
இதற்கான பொதுவான அறிவுரை என்னவெனில், பி.இ/எம்.பி.ஏ/எம்.சி.ஏ போன்ற, உடனடி வேலைவாய்ப்புக்கான தொழில் படிப்புகளைப் பொறுத்தவரை, கல்லூரியே முக்கியம் என்பதுதான் அது. ஆனாலும், சிலர் இன்னும் வேறுமாதிரியாக கூறுகிறார்கள். தொழிற் படிப்புகளுக்கு மட்டுமல்ல, பி.ஏ போன்ற கலை படிப்புகளுக்குமே, கல்லூரியின் புகழ் வலு சேர்க்கிறது என்கிறார்கள். அதேசமயத்தில், ஒரு புகழ்வாய்ந்த கல்லூரியில் படித்தாலும், படிக்கும் பாடத்தில் சுத்தமாக ஆர்வமோ, விருப்பமோ இல்லாதபட்சத்தில், பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
ஆர்வமா, வேலை வாய்ப்பா? எது முக்கியம்?
நமது சமூகத்தில் பொதுவாக, வேலைவாய்ப்புகளை வைத்தே, ஒருவரின் படிப்பு தேர்வு அமைகிறது. தனிமனித ஆர்வத்திற்கும், திறமைக்கும் பொதுவாக முக்கியத்துவம் கிடைப்பதில்லை. ஆனால், ஒருவர் என்னதான் அதிக சம்பளத்திற்கு வேலை பார்த்தாலும், செய்யும் பணியில் ஒருவருக்கு ஈடுபாடும், திருப்தியும் இருப்பது முக்கியம். சிலரின் படிப்பிற்கும், அவர் செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமே இருக்காது.
ஒருவர், கணிப்பொறி அறிவியலில் எம்.டெக் படித்துவிட்டு, ஸ்போர்ட்ஸ் அகடமி நடத்துகிறார். என் வாழ்வில் நான் 10 ஆண்டுகளை கணினி துறையில் வீணடித்து விட்டேனே என்று புலம்புகிறார். வரலாற்றில் அதிக ஆர்வமுடைய ஒருவர், அதிலேயே எம்.பில் வரை படித்துவிட்டு, வேலைவாய்ப்பு குறைவு என்று தெரிந்ததும், மீண்டும் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டுள்ளார். அதிக வேலைவாய்ப்பு என்பதுதான் அவரின் தாவலுக்கு காரணம்.
எனவே, சிறந்த வேலைவாய்ப்புகளைக் கொண்ட படிப்பை நோக்கி நமது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, அதில் நமது திறமையை எவ்வாறு நிரூபிக்கலாம் என்பதை திட்டமிட வேண்டும் அல்லது நமக்கு விருப்பமான துறையில், தற்போதைக்கு வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில், எந்தவகையில் புதிய வேலைவாய்ப்புகளை நாமே சுயமாக உருவாக்கிக் கொள்ளலாம் என்பதையும், இளையதலைமுறையினர் புதுமையாக யோசிக்கப் பழக வேண்டும். ஏனெனில், இன்றைய கார்பரேட் உலகம் வேறு. அந்த காலம் வேறு. இன்றைய நிலையில், புதுமையான ஒவ்வொரு முயற்சிக்கும் பணம் கிடைக்கும். எனவே, சூழலுக்கு ஏற்றவாறு நம்மை நாம் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
இளநிலைப் படிப்பிலேயே ஸ்பெஷலைசேஷன் தேவையா?
புதிய தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையால், வழக்கமான பி.ஏ/பி.எஸ்சி போன்ற படிப்புகள் BS, BBA, BIFA, BSc (Tech) போன்ற படிப்புகளால் பின்தள்ளப்பட்டுவிட்டன. இளநிலை பட்டப்படிப்பிலேயே, Applied Nutrition, Biotechnology, Nanotechnology போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. கார்பரேட் யுகத்தில், ஒருவருக்கு ஆரம்ப நிலையிலேயே ஸ்பெஷலைசேஷன் தேவைப்படுகிறது மற்றும் தொழில்துறை தேவைகளுக்கேற்ப தனது திறமையை தகவமைத்துக் கொள்ளவேண்டியுள்ளது. அதேசமயத்தில் இதுதொடர்பாக வேறு கருத்தும் உள்ளது.
BBA, BBS, BMS போன்ற படிப்புகளை முடித்த மாணவர்கள், Admin, Secretarial, coordination, sales and human resources job போன்ற பணி நிலைகளில் நேரடியாக நுழையும் தகுதியைப் பெறுகிறார்கள். ஆனால், சில வருட பணி அனுபவத்திற்கு பிறகு, பதவி உயர்வு என்ற நிலை வருகையில், முதுநிலைப் படிப்பு தகுதி தேவைப்படுகிறது. எனவே, அந்த வகையிலும் திட்டமிடுதல் இருக்க வேண்டும். மேலும், ஸ்பெஷலைசேஷன் படிப்பை பொறுத்தவரை, ஒருவரின் தனிப்பட்ட ஆர்வம், அதற்கான வேலைவாய்ப்பு மற்றும் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மதிப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கட்டணம் மற்றும் சிறப்பான பயிற்சி
தொழில்துறை தொடர்பான படிப்புகளை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், ஒரு கல்வி நிறுவனம், தொழில் நிறுவனங்களிலிருந்து நிபுணர்களை அழைத்து வந்து உரையாற்ற வைத்து, மாணவர்களை திட்டங்களில் பங்கெடுக்க வைப்பதை தனது திட்டமாக கொண்டிருக்கலாம். ஆனால், நடைமுறையில் அது செயல்படுத்தப்படுகிறதா? என்பதை பார்க்க வேண்டும். ஒரு சில கல்வி நிறுவனங்களிலேயே இவை பின்பற்றப்படுகின்றன.
அங்கீகாரம் முக்கியம்
நீங்கள் ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கையில் அதன் பரவலான அங்கீகாரம் பற்றி கட்டாயம் விசாரிக்க வேண்டும். ஏனெனில், ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு படிப்பானது, இன்னொரு மாநிலத்தில் செல்லுபடியாகாது. எனவே, நீங்கள் மேற்கொள்ளும் படிப்பு, நாடு முழுவதின் அங்கீகாரத்தைப் பெற்றதா என்பதை ஆய்வு செய்வது மிகவும் முக்கியம்.
ஆசிரியர் தொழில் சார்ந்த படிப்பாக இருந்தாலும் சரி, சட்டத்துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும் சரி அல்லது மருத்துவம் சார்ந்த படிப்பாக இருந்தாலும் சரி, முறையான அங்கீகாரம் இருந்தால்தான் உங்களின் பணமும், நேரமும் விரயமாகாது தடுக்கலாம்.
கல்லூரியை பற்றிய கவலை வேண்டாம்
பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு, மதிப்பெண்கள் எப்படி வருமோ? அதை வைத்து, எந்தக் கல்லூரி கிடைக்குமோ என்ற கவலை பல மாணவர்களுக்கு இருக்கும். ஆனால், சாதனையாளர்கள் தரும் பொதுவான அறிவுரை என்னவெனில், எந்தக் கல்லூரியில் சேரப் போகிறோம் என்பதைப் பற்றி கவலைப்படாமல், அந்தக் கல்லூரியிலிருந்து எதைப் பெறுகிறோம் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

குழந்தைகளின் விருப்பம்போல் அனுமதியுங்கள்: முதன்மை கல்வி அலுவலர்


பீளமேடு: "குழந்தைகளின் விருப்பம்போல், படிக்கும் துறையை தேர்வு செய்ய அனுமதியுங்கள்&'&' என, முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பேசினார்.
கோவை, ஜி.ஆர்.ஜி., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் பூங்கோதை வரவேற்றார். தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பேசியதாவது: குழந்தைகளின் விருப்பம் அறிந்து, அவர்களுக்கு ஆர்வம் உள்ள துறையில், பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
10ம் வகுப்பு முடித்ததும், பிளஸ் 2 வுக்கு செல்வோர், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்ற போட்டியை, பெற்றோர்களே உருவாக்குகின்றனர். திறமை இருந்தால், எந்த துறையாக இருந்தாலும், சாதிக்க முடியும். அனைவரது உள்ளத்தில் பதிந்துள்ள சிந்தனையில், இது போன்ற கல்வி தான் உயர்ந்தது என்ற எண்ணம் உள்ளது. எந்தக் கல்வியை கற்றாலும், அதை சிறப்புறச் செய்தால், அதற்கான வாய்ப்புகள், சாதனைகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இலக்கியம், ஓவியம், விளையாட்டு போன்ற துறைகளில், குழந்தைகளை ஊக்கப்படுத்தும்போது, அவர்களது கற்பனை திறன் மேலும்,மேலும் உயர்கிறது. பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே விளையாட அனுமதிக்கின்றனர். கல்வியை விட, விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் பள்ளியிலும், வீட்டிலும் கொடுக்கும்போதுதான், கல்வியை மிக துல்லியமாக கற்க முடியும்.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காததால், ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களை, இந்தியாவால் பெற முடியவில்லை. குழந்தைகளிடம் உள்ள திறமையை அறிந்து, அதை ஊக்கப்படுத்தினால், திறமை தானாக வளரும்.
அடிப்படை அறிவியலை கற்றுக்கொண்டால் மட்டுமே, அறிவு வளரும். மேலை நாடுகளான சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், அடிப்படை தொழில்நுட்பங்களை அறிந்து செயல்படுகின்றன. இந்தியாவின் பெரும் வெற்றியாளர்கள், அடிப்படை அறிவியலை அறிந்ததால் சாதித்துள்ளனர். எனவே, புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக இருக்கும், அடிப்படை அறிவியலை அனைவரும் கற்பது அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.
                                                                                           COURTESY-DINAMALAR

359 சிறந்த ஆசிரியர் விருதுக்கு 1,000 பேர் போட்டி

சென்னை: முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ல், சிறந்த ஆசிரியர், 359 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு, மாநிலம் முழுவதும் இருந்து, 1,000 பேர் போட்டியில் உள்ளனர்.
இம்மாத இறுதியில், பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையிலான குழு கூடி, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது.
ஆசிரியர் பணியில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, ஜனாதிபதி ஆனவர் ராதாகிருஷ்ணன். அவரின் பிறந்த நாளான செப்.,5ம் தேதி, தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
மத்திய அரசு விருது
மிகச் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர், தேசிய அளவிலும், அந்தந்த மாநில அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கின்றன. மத்திய அரசின் விருது, ஒவ்வொரு மாநிலத்திற்கு தகுந்தாற்போல் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கு, 22 விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கான ஆசிரியர் பட்டியலை, ஓரிரு நாளில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட உள்ளது.
மாநில அரசு விருது
மாநில அரசு சார்பில், 359 ஆசிரியருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாநிலத்தில், 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையைச் சேர்ந்த பேராசிரியர் என, பல்வேறு துறைகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும்.
அதன்படி, 2,000த்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், கல்வி மாவட்டங்களில் பெறப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு, கல்வி மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து, ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஆறு விண்ணப்பங்கள் வீதம் தேர்வு செய்து, மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, மாநில குழுவிற்கு, 1,000 விண்ணப்பங்கள் வரை வந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையிலான குழு, அடுத்த வாரத்தில் சென்னையில் கூடி, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது. இக்குழுவில், தொடக்கக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல்வாதிகளை மொய்க்கும் ஆசிரியர்
சிறந்த நல்ஆசிரியர் விருதுக்கு, பரிந்துரை செய்யுமாறு, மாவட்ட அமைச்சர்கள், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரை ஆசிரியர்கள் மொய்த்து வருகின்றனர். இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, "சிறந்த ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு தகுதிகள் உள்ளன. வரையறுக்கப்பட்ட தகுதிகள் உள்ளவருக்கு மட்டுமே, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு, நேர்மையான முறையில் நடக்கும்,&'&' என்றார்.
தகுதிகள் என்னென்ன?
பணிமூப்பு, கற்பித்தலில் உள்ள திறமை, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவ, மாணவியர் பெற்ற தேர்ச்சி சதவீதம், பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம், தலைமை ஆசிரியராக இருந்தால், பள்ளி வளர்ச்சிக்காகவும், கல்வித்தர மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த அளவில், அவரின் செயல்பாடுகள் குறித்த விவரம் ஆய்வு செய்யப்படும்.
மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனரா, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவு மாணவர்கள் கல்வி பெறுவதற்காக சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டார்களா என்பது உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்.
                                                                                             COURTESY-DINAMALAR

Saturday, 11 August 2012

INDIAN FREEDOM FIGHTERS

 Freedom Fighters



Dr. Rajendra Prasad
Dr. Rajendra Prasad
Date of Birth : Dec 3, 1884
Date of Death : Feb 28, 1963
Place of Birth : Zeradei, Bihar
Tenure Order : 1st President
-- More
Purushottam Das Tandon
Purushottam Das Tandon
Date of Birth : Aug 1, 1882
Date of Death : Jul 1, 1962
Place of Birth : Uttar Pradesh
-- More

Motilal Nehru
Motilal Nehru
Date of Birth : May 6, 1861
Date of Death : Feb 6, 1931
Place of Birth : Delhi
-- More
Jawaharlal Nehru
Jawaharlal Nehru
Date of Birth : Nov 14, 1889
Date of Death : May 27, 1964
Place of Birth : Uttar Pradesh
-- More

Lal Bahadur Shastri
Lal Bahadur Shastri
Date of Birth : Oct 2, 1904
Date of Death : Jan 11, 1966
Place of Birth : Uttar Pradesh
-- More



Jayaprakash Narayan
Jayaprakash Narayan
Date of Birth : Oct 11, 1902
Date of Death : Oct 8, 1979
Place of Birth : Uttar Pradesh
-- More
Hakim Ajmal Khan
Hakim Ajmal Khan
Date of Birth : 1863
Date of Death : 1927
Place of Birth : Delhi
-- More

Pandit Madan Mohan Malaviya
Pandit Madan Mohan Malaviya
Date of Birth : Dec 25, 1861
Date of Death : 1946
Place of Birth : Allahabad
-- More
Feroze Gandhi
Feroze Gandhi
Date of Birth : Aug 12, 1912
Date of Death : Sep 8, 1960
Place of Birth : India
-- More

Liaquat Ali Khan
Liaquat Ali Khan
Date of Birth : Oct 1, 1896
Date of Death : Oct 16, 1951
Place of Birth : Karnal
-- More
Maulana Mohammad Ali
Maulana Mohammad Ali
Date of Birth : 1878
Date of Death : 1931
Place of Birth : Rampur
-- More

Maulana Shaukat Ali
Maulana Shaukat Ali
Date of Birth : 1873
Date of Death : 1938
Place of Birth : Uttar Pradesh
-- More
Govind Ballabh Pant
Govind Ballabh Pant
Date of Birth : Sep 10, 1887
Date of Death : Mar 7, 1961
Place of Birth : Uttar Pradesh
-- More

Dr.Shanker Dayal Sharma
Dr.Shanker Dayal Sharma
Date of Birth : Aug 19, 1918
Date of Death : Dec 26, 1999
Place of Birth : India
Tenure Order : 9th President
-- More
Mahavir Tyagi
Mahavir Tyagi
Date of Birth : 1899
Date of Death : 1980
Place of Birth : Uttar Pradesh
-- More

Mukhtar Ahmed Ansari
Mukhtar Ahmed Ansari
Date of Birth : Dec 25, 1880
Date of Death : 1936
Place of Birth : Ghazipur
-- More
Ram Manohar Lohia
Ram Manohar Lohia
Date of Birth : Mar 23, 1910
Date of Death : Oct 12, 1967
Place of Birth : Faizabad (UP)
-- More

Chandrasekhar Azad
Chandrasekhar Azad
Date of Birth : Jul 23, 1906
Date of Death : Feb 27, 1931
Place of Birth : India
-- More
Dr. B.R. Ambedkar
Dr. B.R. Ambedkar
Date of Birth : Apr 14, 1893
Date of Death : Dec 6, 1956
Place of Birth : Madhya Pradesh
-- More

Mohandas Karamchand Gandhi
Mohandas Karamchand Gandhi
Date of Birth : Oct 2, 1869
Date of Death : Jan 30, 1948
Place of Birth : Gujarat
-- More
Dadabhai Naoroji
Dadabhai Naoroji
Date of Birth : Sep 4, 1825
Date of Death : Jun 30, 1917
Place of Birth : India
-- More

Sardar Vallabhbhai Patel
Sardar Vallabhbhai Patel
Date of Birth : Oct 31, 1875
Date of Death : Dec 15, 1950
Place of Birth : Gujarat
-- More
Bal Gangadhar Tilak
Bal Gangadhar Tilak
Date of Birth : Jul 23, 1856
Date of Death : 1920
Place of Birth : Maharashtra
-- More

Ravi Shankar Vyas
Ravi Shankar Vyas
Date of Birth : -
Date of Death : -
Place of Birth : Gujarat
-- More
Narhari Parikh
Narhari Parikh
Date of Birth : -
Date of Death : -
Place of Birth : India
-- More

Jivatram Kripalani
Jivatram Kripalani
Date of Birth : 1888
Date of Death : Mar 19, 1982
Place of Birth : Gujarat
-- More
Mahadev Desai
Mahadev Desai
Date of Birth : Jan 1, 1892
Date of Death : Aug 15, 1942
Place of Birth : Gujarat
-- More

Mohanlal Pandya
Mohanlal Pandya
Date of Birth : -
Date of Death : -
Place of Birth : India
-- More
Abbas Tyabji
Abbas Tyabji
Date of Birth : -
Date of Death : Jun 9, 1936
Place of Birth : Gujarat
-- More

Gopal Krishna Gokhale
Gopal Krishna Gokhale
Date of Birth : May 9, 1866
Date of Death : 1915
Place of Birth : Maharashtra
-- More
Narahar Vishnu Gadgil
Narahar Vishnu Gadgil
Date of Birth : -
Date of Death : -
Place of Birth : Maharashtra
-- More

Vithalbhai Patel
Vithalbhai Patel
Date of Birth : 1871
Date of Death : 1935
Place of Birth : Gujarat
-- More
Vinoba Bhave
Vinoba Bhave
Date of Birth : Sep 11, 1895
Date of Death : Nov 15, 1982
Place of Birth : Maharashtra
-- More

Ganesh Vasudev Mavlankar
Ganesh Vasudev Mavlankar
Date of Birth : -
Date of Death : -
Place of Birth : Gujarat
-- More
Vinayak Damodar Savarkar
Vinayak Damodar Savarkar
Date of Birth : May 28, 1883
Date of Death : 1966
Place of Birth : Nasik
-- More

Muhammad Ali Jinnah
Muhammad Ali Jinnah
Date of Birth : Dec 25, 1876
Date of Death : Sep 11, 1948
Place of Birth : Karachi
-- More
Kulapati K.M. Munshi
Kulapati K.M. Munshi
Date of Birth : Dec 30, 1887
Date of Death : 1971
Place of Birth : Broach
-- More

Senapati Bapat
Senapati Bapat
Date of Birth : Nov 12, 1880
Date of Death : Nov 28, 1967
Place of Birth : Maharashtra
-- More
Mahadeo Govind Ranade
Mahadeo Govind Ranade
Date of Birth : -
Date of Death : Jan 16, 1901
Place of Birth :
MAHARASTRA
-- More

Subhas Chandra Bose
Subhas Chandra Bose
Date of Birth : Jan 23, 1897
Date of Death : Aug 18, 1945
Place of Birth : Orissa
-- More
Bipin Chandra Pal
Bipin Chandra Pal
Date of Birth : Nov 7, 1858
Date of Death : -
Place of Birth : Sylhet (Bangladesh)
-- More

Chittaranjan Das
Chittaranjan Das
Date of Birth : Nov 25, 1870
Date of Death : Jun 16, 1925
Place of Birth : India
-- More
Maulana Abul Kalam Azad
Maulana Abul Kalam Azad
Date of Birth : Nov 11, 1888
Date of Death : Feb 22, 1958
Place of Birth : -
-- More

Rabindranath Tagore
Rabindranath Tagore
Date of Birth : May 7, 1861
Date of Death : Aug 8, 1941
Place of Birth : West Bengal
-- More
Surya Sen
Surya Sen
Date of Birth : -
Date of Death : Jan 8, 1934
Place of Birth : India
-- More

Gopinath Bordoloi
Gopinath Bordoloi
Date of Birth : 1890
Date of Death : 1950
Place of Birth : India
-- More
Benoy Basu
Benoy Basu
Date of Birth : Sep 11, 1908
Date of Death : Dec 13, 1930
Place of Birth : Rohitbhog
-- More

Badal Gupta
Badal Gupta
Date of Birth : 1912
Date of Death : 1930
Place of Birth : Dhaka
-- More
Dinesh Gupta
Dinesh Gupta
Date of Birth : Dec 6, 1911
Date of Death : Jul 7, 1931
Place of Birth : Josholong
-- More

Khudiram Bose
Khudiram Bose
Date of Birth : Dec 3, 1889
Date of Death : Aug 11, 1908
Place of Birth : Bengal
-- More
Bagha Jatin
Bagha Jatin
Date of Birth : Dec 7, 1879
Date of Death : Sep 10, 1915
Place of Birth : Nadia district
-- More

Barindra Kumar Ghosh
Barindra Kumar Ghosh
Date of Birth : Jan 5, 1880
Date of Death : Apr 18, 1959
Place of Birth : Norwood
-- More
Aravinda Ackroyd Ghosh
Aravinda Ackroyd Ghosh
Date of Birth : August 15, 1872
Date of Death : Dec 5, 1950
Place of Birth : Calcutta
-- More

Surendranath Banerjea
Surendranath Banerjea
Date of Birth : Nov 19, 1848
Date of Death : 1925
Place of Birth : India
-- More
Ambika Chakrobarty
Ambika Chakrobarty
Date of Birth : -
Date of Death : -
Place of Birth : India
-- More

C. Rajagopalachari
C. Rajagopalachari
Date of Birth : Dec 10, 1878
Date of Death : Dec 25, 1972
Place of Birth :
TAMILNADU
-- More
Krishna Menon
Krishna Menon
Date of Birth : May 3, 1897
Date of Death : Oct 6, 1974
Place of Birth : Kerala
-- More

Bhogaraju Pattabhi Sitaramayya
Bhogaraju Pattabhi Sitaramayya
Date of Birth : Nov 24, 1880
Date of Death : -
Place of Birth : Andhra Pradesh
-- More



Muhammad Iqbal
Muhammad Iqbal
Date of Birth : Nov 9, 1877
Date of Death : Apr 21, 1938
Place of Birth : India
-- More
Lala Lajpat Rai
Lala Lajpat Rai
Date of Birth : Jan 28, 1865
Date of Death : Nov 17, 1928
Place of Birth : Moga district
-- More

Sardul Singh Caveeshar
Sardul Singh Caveeshar
Date of Birth : 1886
Date of Death : 1963
Place of Birth : Amritsar
-- More
Sheikh Abdullah
Sheikh Abdullah
Date of Birth : 1905
Date of Death : 1982
Place of Birth : Kashmir
-- More

Khan Abdul Ghaffar Khan
Khan Abdul Ghaffar Khan
Date of Birth : 1890
Date of Death : Jan 20, 1988
Place of Birth : Peshawar
-- More
Bhagat Singh
Bhagat Singh
Date of Birth : Sep 27, 1907
Date of Death : Mar 23, 1931
Place of Birth : Jalandhar
-- More

Shivaram Rajguru
Shivaram Rajguru
Date of Birth : 1908
Date of Death : Mar 23, 1931
Place of Birth : India
-- More
Sukhdev
Sukhdev
Date of Birth : -
Date of Death : Mar 23, 1931
Place of Birth : India
-- More

Tej Bahadur Sapru
Tej Bahadur Sapru
Date of Birth : Dec 8, 1875
Date of Death : Jan 20, 1949
Place of Birth : Uttar Pradesh
-- More
Sikander Hyat Khan
Sikander Hyat Khan
Date of Birth : -
Date of Death : -
Place of Birth : India
-- More

Madan Lal Dhingra
Madan Lal Dhingra
Date of Birth : 1887
Date of Death : Aug 17, 1909
Place of Birth : Punjab
-- More
Udham Singh
Udham Singh
Date of Birth : Dec 26, 1899
Date of Death : July 31, 1940
Place of Birth : Sunam
-- More

Kartar Singh Sarabha
Kartar Singh Sarabha
Date of Birth : 1896
Date of Death : Nov 16, 1915
Place of Birth : Sarabha
-- More