Translate

Tuesday, 18 September 2012

அரசு பள்ளிகளில் சரியும் மாணவர் எண்ணிக்கை

  சென்னை: தமிழகத்தில் உள்ள துவக்கப் பள்ளிகளில், வசதி வாய்ப்புகளும், ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தாலும், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால், பாதிக்கும் மேற்பட்ட அரசு துவக்கப் பள்ளிகளுக்கு, மூடுவிழா நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.
  தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு மற்றும் உதவிபெறும் துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. துவக்கக் கல்வியை தரமானதாக்க, உலக வங்கி உதவியுடன், பத்து ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கம் துவங்கப் பட்டது.
   இத்திட்டம் துவக்கப்படும் முன், அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வகுப்பறை, கழிவறை, குடி நீர் வசதிகள் குறைவாகவும் இருந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகளால், அனைத்து பள்ளிகளிலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கல்வி முறையும் மாற்றி அமைக்கப்பட்டு, மாணவர்கள் தாமாகவே கற்றுக் கொள்ளும், செயல்வழிக் கற்றல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
   ஏராளமான துவக்கப் பள்ளிகள் துவங்கியதுடன், புதிய ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டன. நாற்பது மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலையை மாறி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை உருவானது.கடந்த பத்து ஆண்டுகளில், துவக்கப் பள்ளிகளின் நிலை, எதிர்பார்த்த அளவிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், மாணவர் சேர்க்கையோ, தலைகீழாக உள்ளது.
   மக்கள் தொகை வளர்ச்சியில், ஆண்டுக்கு, 11.72 சதவீத வளர்ச்சி இருக்கும் நிலையில், துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது.
   கடந்த, 2004- 05ம் ஆண்டில், 62 லட்சமாக இருந்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, தற்போது, 58 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அப்போது, 41:1 என்றிருந்த ஆசிரியர் மாணவர் விகிதம், தற்போது, 27:1 என்ற நிலைமைக்கு மாறியுள்ளது. துவக்கப் பள்ளிகளில், ஓய்வுபெறும் பணியிடங்களையும், பணி நிரவல் செய்வதன் மூலமே நிரப்பிவிடும் நிலை உள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள, அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்துள்ளது.
   இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: குழந்தைகளின் கல்வியில் அக்கறை கொண்டுள்ள அனைத்து பெற்றோரும், தங்களது குழந்தைகளை, தனியார் பள்ளியில் சேர்க்கவே விரும்புகின்றனர். அரசு பள்ளியில் படிப்பதை, கவுரவக் குறைச்சலாக சில பெற்றோர் நினைக்கின்றனர்.
  அரசு ஊழியரின் குழந்தை கூட, அரசு பள்ளியில் படிப்பதில்லை.கல்வி குறித்து, ஆசிரியர்களிடம் கேள்வி கேட்காத பெற்றோரின் குழந்தைகள் மட்டுமே, அரசு பள்ளியில் படிக்கின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களிடம், கல்வி கற்பித்தலில் அதிக அக்கறை காட்டாததும் இதற்கு காரணம்.இவ்வாறு, கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

                                                                                                      Courtesy-DINAMALAR

கட்டாய கல்வி சட்டம்: ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி

    தேனி: கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 27 முதல், மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, 2013 மார்ச் மாதத்திற்குள், அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 27ம் தேதி, வட்டார வள மைய அளவில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 28ம் தேதி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 29ம் தேதி நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது.
    தமிழக கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன வழிகாட்டுதல் படி, அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

                                                                                                                                             Courtesy--Dinamalar

Saturday, 15 September 2012

பி.எல். படிப்பு: 20ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

  சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
   இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் டி.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளில் மூண்றாண்டு பி.எல். படிப்பில் மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன.
இதில் சேருவதற்கு 6,110 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான கட் ஆப் மார்க் வெளியிடப்பட்டு இருக்கிறது. சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும், பல்கலைக்கழக தகவல் பலகையிலும் கட் ஆப் மார்க் பட்டியலை பார்க்கலாம். அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவு - 71.033
பிற்படுத்தப்பட்டோர் - 64.090
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) - 63.217
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் - 63.478
ஆதி திராவிடர் - 56.807
ஆதி திராவிடர் (அருந்ததியர்) - 62.474
பழங்குடியினர் - 56.807
   சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான பொது கலந்தாய்வு, சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.
   தகுதியுள்ள மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவு தபால் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் தங்கள் கட் ஆப் மார்க்கிற்கு ஏற்ப குறிப்பிட்ட நாளில் கவுன்சிலிங்கிற்கு நேரடியாக மாணவர்கள் வந்துவிடலாம். இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்கள் ரேங்க் பட்டியலை மாணவர்கள் எடுத்து வர வேண்டும்.
  கலந்தாய்வின் போது காலி இடங்கள் ஏற்பட்டால் அவை காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களால் நிரப்பப்படும். இதற்கான கவுன்சிலிங் 22, 24, 25ம் தேதிகளில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு செப்டம்பர் 21ல் திறனறிதல் தேர்வு

   தேனி: தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, வரும் 21ம் தேதி திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
   தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் பள்ளிகளில், தற்போது அரசுப் பள்ளிகளைப் போல், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வு கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) இருக்கும்.
   தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில், ஆசிரியர்கள் நடத்திய பாடத்தில் இருந்து, மிகவும் அடிப்படையான கேள்விகள் இருக்கும். இம்மாதம் 21ம் தேதி தேர்வு நடக்கிறது. இதனடிப்படையில், கற்பித்தில் திறனை மேம்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

Saturday, 8 September 2012

ஏழ்மையினால் படிப்பை கைவிட்டாலும் உலகை திகைக்க செய்த விஞ்ஞானி

   அமெரிக்காவின் தலைசிறந்த அரசியல் அறிஞரும் உலகம் போற்றும் விஞ்ஞானியுமான பெஞ்சமின் பிராங்கலின் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை கைவிட்டு பத்து வயதிலே வேலைக்கு பேனவர் என்று உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் நண்பர்களே அந்த வியத்தகு விஞ்ஞானியின் வரலாற்றை புரட்டிப்பார்ப்போம் .


   அமெர்க்காவின் பாஸ்டன் நகரில் எளியகுடும்பம் ஒன்றில் பிறந்த பிராங்கலின் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை கைவிட்டு விட்டு 10 வயதிலே தனது தந்தையுடன் மெழுகுவர்த்தி தொழிலை மேற்கொண்டார் . ஆனால் அவருக்கு அந்த தொழில் பிடிக்கவில்லை ஆதலால் அச்சுக்கூடத்தில் வேலைக்கு சேர்ந்தார் . சிறு வயதிலே அச்சுக்கூடத்தை தனியாக நிர்வாகாம் செய்யும் அளவிற்க்கு திறமையை வளர்த்துக்கொண்டார் .

பட்டினி இருந்தும் அறிவை வளர்தவர்

  அச்சுத்துறையில் பணியாற்றியதால் பலவகையான் நூலக்ளை வாசிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது . பள்ளிப்படிப்பை கைவிட்டாலும் தன்னுடைய உணவுச்செலவை குறைத்துக்கொண்டும் சில நேரங்களில் பட்டினி இருந்தும் பணத்தை மிச்சப்படுத்தி பல வகையான நூல்கள் வாங்கி படித்தார் தனது இருபது வயதில் தனியாக அச்சுக்கூடத்தை நிறுவி நூல்களை வெளியிட்டார் .அறிவை வளர்க்கும் தரமான நூல்கள் கிடைக்காமல் தான் பட்ட கஷ்டங்களை மக்கள் படக்கூடாது என்பதற்காக  முதன் முறையாக நடமாடும் நூல் நிலையம் ஒன்றினை அமைத்தார்

அறிவியல் சாதனைகள்

பிராங்லின் தனது 38 ஆம் வயதில் அறிவியல் துறையில் நிலைமின்சாரம் ஆராய்ச்சியில் இறங்கினார் லண்டன் நகரில் மின்புயலின்(Electric storm) போது பட்டம் ஒன்றை பறக்கவிட்டு மின்னல் மின்னாற்றலால் ஏற்படுகிறது என்று உலகிற்கு அறிவித்தார் மேலும் இடி இடிக்கும்போது கூர்மையான இரும்பு கம்பியை உயரமான கட்டிடத்தில் வைத்து அதை ஒரு கம்பி வழியாக பூமியில் செலுத்தும் இடிதாங்கி தத்துவத்தையும் கூறினார். ஜரோப்பா முழுவதும் இவரது ஆய்வினை அறிந்ததோடு மட்டுமில்லாமல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்த்தும்  வெளிட்டனர்.

உலகை திகைக்க செய்த சோதனை

  மின்னேற்றத்தை சேமிக்கும் லெய்டன் ஜார் (leyden jar) எனப்படும் குடுவை உட்புறம் நீரினை நிரப்பிக்கொண்டார் அதன் வெளிப்புறம் உலோகமுலாம் பூசப்பட்டது. இந்த ஜாடியினை மின்னேற்றம் செய்தார் பின் ஜாடியில் இருந்து நீரினை கொட்டி விட்டு புதிதாக நீரினை நிரப்பினார் அப்போதும் ஜாடி மின்னேற்றம் கொண்டு இருந்தது அதுவரை அறிவியல் உலகம் நீரில் தான் மின்னேற்றம் இருக்கும் என நம்பி வந்தது ஆனால் தனது லெய்டென் ஜார் சோதனை மூலம் மின்னேற்றம் ஜாடியின் நீரில் இல்லை கண்ணாடியில் இருந்தது என நிறுவிக்காட்டினார் இந்த தத்துவம்மூலம் தொலைக்காட்சி , வானொலிகளில் பயன்படும் parallel plate capacitor ஐ கண்டுபிடித்தார் .
நவீன மின் இயற்பியலுக்கு அடிப்படை
இன்றை அறிவியல் எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்சாரம் என்று கூறுகிறது இதை பதினேழாம் நூற்றான்டிலே தனது மின்சாரம் பற்றிய பாய்மக்கொள்கை(Fluid Theory of Electricity ) யில் பிராங்கலின் கூறியுள்ளார் அதன் சாரம்சம் இதுதான் “ அனைத்து பொருள்களும் ஓரளவு மின் பாய்மத்தை தன்னுள்ளே கொண்டு உள்ளது ஒரு பொருள் மின் பாய்மத்தை ஏற்க்கவோ அல்லது இழக்கவோ செய்யும் அது பாய்மத்தை ஏற்றாலும் இழந்தாலும் மின்னேற்றம் கொண்டதாக மாறிவிடுகிறது மின் பாய்மத்தை ஏற்றால் நேர்மின்னோட்டம், மின்பாய்மத்தை இழந்தால் அது எதிர் மின்னோட்டம் “
  பிராங்லின் இந்த தத்துவம் தான் இன்றைய நவீன மின் இயற்பியலுக்கு அடிப்படை
ஏழ்மையால் பள்ளிப்படிப்பை பத்து வயதிலே நிறுத்திய பெஞ்சமின் பிராங்கலின் அரசியலில் பல பதவிகளை பெற்று உயர் நிலையை அடைந்ததோடு மட்டுமல்ல அறிவியல் துறையிலும் பல சாதனைப்படைத்தார் . தனது 85 ஆம் வயதில் இறந்தார்

Friday, 7 September 2012

செப்.15 முதல் முப்பருவ கல்வி திட்டப் புத்தகங்கள் வினியோகம்


    சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான, 9.50 கோடி பாடப் புத்தகங்கள், 15ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.

    நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைத்து வகை பள்ளிகளிலும், முப்பருவக் கல்வி முறை திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. அதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடத் திட்டம், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பருவத்திற்கான பாடத் திட்டம், இந்த மாதத்துடன் முடியும் நிலையில், அக்டோபரில் இரண்டாம் பருவம் துவங்குகிறது. அதற்காக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக, 9.50 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. இவை, 15ம் தேதியில் இருந்து, மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: மொத்தம், 140 அச்சகங்களில், இரண்டாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள், அச்சடித்து முடிக்கப்பட்டு, மாவட்டங்களில் உள்ள வினியோக மையங்களுக்கு, நேரடியாக அனுப்பப்பட்டு வருகின்றன. 15ம் தேதி முதல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கும் பணிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்வர்.ன்று முதல், ஆறாம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், அதிக பக்கங்களைக் கொண்டதாக இருந்ததால், இரு புத்தகங்களாக பிரித்து வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம், 70 பக்கங்களாகவும், அதிகபட்சம், 170 பக்கங்களை கொண்டதாகவும், இந்த புத்தகங்கள் இருக்கும்.
     தனியார் பள்ளி மாணவர்களுக்காக, 30 சதவீத புத்தகங்கள், விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை, பாடநூல் கழக கிடங்குகளில் இருந்து, தனியார் பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம்.சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பாடநூல் கழக அலுவலக கவுன்டர்களில், 15ம் தேதியில் இருந்து, இரண்டாம் பருவ புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும். இவ்வாறு, கோபால் தெரிவித்தார்.

வகுப்பறை வழிபாடுகளை கண்காணிக்க அரசு உத்தரவு

தேனி: மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில், நடத்தப்படும் வகுப்பறை வழிபாடுகளை கண்காணிக்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் காலை வகுப்புகள் துவங்குவதற்கு முன், அனைத்து மாணவர்களின் கூட்டு வழிபாடு நடைபெறும். இதில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். இதனால், மாணவர்களின் தனித்திறன் வளர வாய்ப்பில்லை; தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முழுமையாக தெரிவதும் இல்லை என்ற குறைபாடு உள்ளது.
இதைப் போக்கும் வகையில், வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் கூட்டு வழிபாடு நடத்தவும், மற்ற நாட்களில் வகுப்பறை வழிபாடு நடத்தவும், பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஜூலை 7 முதல் வகுப்பறை வழிபாடு நடத்தப்படுகிறது.
இதில், தினமும் காலையில் ஒவ்வொரு வகுப்பிலும், வகுப்பு ஆசிரியர் தலைமையில், ஐந்து மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு மாணவன் தமிழ்தாய் வாழ்த்து படித்தும், அடுத்த மாணவன் திருக்குறள் படித்தும், மற்ற இரு மாணவர்கள் பழமொழி, நன்னெறி விளக்கம் படித்தும், ஐந்தாவது மாணவன் அன்றைய நாளிதழ் செய்திகளை வாசித்தும் வருகின்றனர்.
இதே போல், தினமும் வகுப்றை வழிபாடு நடைபெறுகிறதா, என கல்வி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
                                                                                                       Courtesy-Dinamalar

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வெளிநாட்டு தொழிற்படிப்பு

Thursday, 6 September 2012

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்டம்பர் 7 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: அக்டோபரில் நடக்கும் பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, செப்டம்பர் 7 முதல், 12ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை அறிவிப்பு: ஏற்கனவே தேர்வெழுதி, சில பாடங்களில் தோல்வியுற்ற தேர்வர், "எச்" வகை விண்ணப்பத்தையும்; பத்தாம் வகுப்பு முடித்து, நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுதுபவர், "எச்பி" வகை விண்ணப்பத்தையும், பூர்த்தி செய்ய வேண்டும். www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம், நாளை முதல், 12ம் தேதி மாலை, 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும், அதில் தரப்பட்டுள்ளன. கட்டணம் செலுத்துவதற்கான, செலானை 12ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட வங்கியில், 13ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பித்தாலும், பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில், தேர்வரின் புகைப்படத்தை ஒட்டி, இறுதியாக படித்த பள்ளியிலோ அல்லது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடமோ, சான்றொப்பம் பெற வேண்டும்.
வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட, அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீதையும் இணைக்க வேண்டும். பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பத்தின் எண்களை, தேர்வர் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு தொடர்பாக, தேர்வுத்துறையிடம் முறையீடு செய்யவோ, இதர பணிகளுக்கோ, அந்த எண், கட்டாயம் தேவை. இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

Saturday, 1 September 2012

மெட்டலர்ஜி இன்ஜினியரிங் படிக்க ஆர்வமா?




பொறியியல் படிப்புகளில் உள்ள முக்கிய பிரிவுகளில் மெட்டலர்ஜி இன்ஜினியரிங் பிரிவும் ஒன்று. மெட்டலர்ஜி என்பது, மெட்டீரியல்ஸ் சயின்ஸ் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் ஆகியவை தொடர்பான துறையாகும். இது, மெட்டலிக் அம்சங்களின் பௌதீக மற்றும் ரசயானப் பண்புகளையும், அதன் உள்மெட்டலிக் இணைப்புகள் மற்றும் அதன் கலப்புகள் ஆகியவைப் பற்றி ஆய்வு செய்கிறது. அனைத்து விதமான மெட்டல் தொடர்பான பகுதிகளையும் கொண்டு, ஒரு விரிவான துறையாக மெட்டலர்ஜி பொறியியல் விளங்குகிறது. பிசிக்கல் மெட்டலர்ஜி பிரித்தெடுக்கும் மெட்டலர்ஜி மற்றும் மினரல் புராசஸிங் போன்றவை அத்துறையின் 3 பெரும் பிரிவுகளாகும்.பிசிக்கல் மெட்டலர்ஜி என்பது சிக்கல் தீர்த்தல் செயல்பாட்டில் பயன்படுகிறது. பல்வேறு விதமான உற்பத்தி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படும் மெட்டாலிக் கூட்டமைப்பு வகைகளை மேம்படுத்தலாம். பிரித்தெடுக்கும் மெட்டரர்ஜி தொழில்நுட்பம் என்பது, தாதுக்களிலிருந்து மெட்டலை பிரித்தெடுக்கும் செயல்பாட்டில் பயன் படுத்தப்படுகிறது. புவி மேலோட்டில் இருந்து தாதுப் பொருட்களை சேகரிக்கும் செயல்பாட்டில் மினரல் புராசஸிங் தொழில்நுட்பம் பயன்படுகிறது. மெட்டலர்ஜிக்கல் பொறியியல் பாடத்தை முதன்மையாக எடுத்துப் படிக்கும் ஒருவர், மேற்கூறிய 3 துறைகளைப் பற்றிய அடிப்படைகளைக் படிப்பதோடு, பொதுவான பொறியியல் பாடத்தையும் படிப்பார்கள். நமது சமூகம் இயங்க நமக்கு உலோகங்கள் தேவை. கார்கள், பைக்குகள், விமானங்கள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களின் முக்கியப் பகுதி பொருளாக உலோகம் உள்ளது. எனவே, இத்தகைய உலோகங்கள் மற்றும் தாதுப்பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் வடிவமைத்தல் மற்றும் மெட்டல் பண்புகளை ஆராய்தல் போன்ற பல விஷயங்களை மெட்டலர்ஜிக்கல் பொறியியல் கற்றுத்தருகிறது. இதைதவிர, வெவ்வேறு விதமான உலோகங்களை சோதனை செய்தல், சூழ்நிலை மாற்றங்கள் மற்றும் பிற நிலைகளைப் பற்றியும் இத்துறை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். மெட்டலர்ஜி நிபுணர்கள் என்பவர்கள், தாதுக்களை கையாளுதல் மற்றும் புதிய கூட்டிணைவுகளை மேம்படுத்தல் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், மேலும் வெவ்வேறு வகையான உலோகங்களின் செயல்பாட்டிற்கான புதிய முறைகளையும் உருவாக்குகிறார்கள். மெட்டலர்ஜி படிப்பை தமிழ்கத்தில் வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:1. என்.ஐ.டி., திருச்சி2. பி.எஸ்.ஜி., டெக்னாலஜி, கோவை3. அரசு பொறியியல் கல்லூரி, சேலம்

+2 பாடத்தைத் தேர்வு செய்வதில் தெளிவு வேண்டும்


அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி


தமிழகத்தில், அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி விருத்தாசலத்தில் இயங்கி வருகிறது. 1964-ம் ஆண்டு செராமிக் பயிற்சிப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது. செராமிக் தொழில்நுட்பத்தில் 4 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் 1972-ம் ஆண்டு தொழில் வணிகத் துறை சார்பில், அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டுப் படிப்பும், 6 மாதப் பயிற்சிக் காலமாகவும் மாற்றப்பட்டது. கல்லூரி தொடங்கப்பட்டபோது சான்றிதழ் படிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பட்டயப் படிப்பாக்கப்பட்டுள்ளது. இப்பட்டயப் படிப்பைப் படிக்க 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இப்படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகால படிப்பும், 6 மாத காலப் பயிற்சியும் வழங்கப்படும். 12-ம் வகுப்பு முடித்து விட்டு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 2 ஆண்டு காலப் பட்டயப் படிப்பும், அத்துடன் 6 மாத காலப்பயிற்சியும் வழங்கப்படுகிறது.விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்  பகுதிகளில்   செராமிக் தொழில்  சார்ந்த காரணிகள் அதிகம் காணப்படுகின்றன. இவ்வாறு தொழில் சார்ந்த   வாய்ப்புகள்  நிரம்பியிருக்கும் விருத்தாசலத்தின் மையப் பகுதியில் இக்கல்லூரி அமைந்துள்ளது. மேலும், மாணவர்கள் படிக்கின்றபோதே தொழில் சார்ந்த பயிற்சிகளை பெறுவதற்கு ஏற்ப, கல்லூரிக்கு அருகிலேயே பல்வேறு பீங்கான் தொழிலை உள்ளடக்கிய செராமிக் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் நாட்டின் முன்னணி நிறுவனங்களான நெய்சர், பாரி, டால்மியா, ஸ்பார்டெக், ஜான்சன் அண்ட்ஜான்சன் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கனடா, மலேசியா மற்றும் அரபு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தொழில் சார்ந்த பட்டயப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் பீங்கான் தொழில்நுட்பப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் எதிர்காலத்தில் அபரிமிதமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.விருத்தாசலம் - ஆலடி சாலையில் கல்லூரி அமையப்  பெற்றுள்ளது. விருத்தாசலம் பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன்  அருகிலேயே உள்ளது.வெளியூர் மாணவர்கள்   தங்குவதற்கு  மாணவர் விடுதியும் செயல்பட்டு வருகிறது. கல்லூரி தொலைபேசி எண்: 04143- 260319

கல்வி உதவித்தொகை: செப்.7 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை:தேசிய திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்வு, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், வரும் நவம்பர் 18ம் தேதி நடக்கிறது.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, கடலூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க, வரும் 7ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி

 

புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 21 கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அந்த 21 போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களையும் யுஜிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள், மாணவர்களுக்கு பட்டமளிக்க தகுதியற்றவை என்றும் யுஜிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
யுஜிசி வெளியிட்டுள்ள 21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்:
பீகார்:
1. Maithili University/Vishwavidyalaya, Darbhanga, Bihar
டெல்லி:2. Varanaseya Sanskrit Vishwavidyalaya, Varanasi (UP)/Jagatpuri, Delhi
3. Commercial University Ltd., Daryaganj, Delhi
4. United Nations University, Delhi
5. Vocational University, Delhi
6. ADR- Centric Juridical University, ADR House, New Delhi
7. Indian Institute of Science and Engineering, New Delhi
கர்நாடகா:
8. Badaganvi Sarkar World Open University Education Society, Gokak, Belgaum
கேரளா:
9. St. John&'s University, Koshanattam, Kerala
மத்திய பிரதேசம்:
10. Keserwani Vidyapith, Jabalpur, Madya pradesh
மகாராஷ்டிரா:11. Raja Arabic University, Nagpur
தமிழகம்:12. DDB Sanskrit University, Putur, Trichi, Tamil Nadu
மேற்குவங்கம்:
13. Indian Institute of Alternative Medicine, Kolkatta
உத்தரப்பிரதேசம்:
14. Mahila Gram Vidyapith/ Vishwavidyalaya, (Women&'s University) Prayag, Allahabad (UP)
15. Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad (UP)
16. National University of Electro Complex Homeopathy, Kanpur
17. Netaji Subash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh
18. Uttar Pradesh Vishwavidyalaya, Kosi Kalan, Mathura (UP)
19. Maharana Partap Shiksha Niketan Vishwavidyalaya, Pratapgarh (UP)
20. Indraprastha Shiksha Parishad, Institutional Area, Noida Phase -II
21. Gurukul Vishwavidyalaya, Vrindavan, Mathura (UP)
                                                                       Courtesy--Dinamalar