சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற கிராமத்து விவசாயி மகள் | Kalvimalar - News
தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மகள், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
பெரியகுளம் லட்சுமிபுரத்தை சேர்ந்த விவசாயி தனசேகரன். இவரது மகள் ரேவதி, 24. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். பின்னர் கோவை பி.எஸ்.ஜி., கல்லூரியில் பி.இ., சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். தற்போது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
அவர் கூறியதாவது:
சிவில் சர்வீஸ் தேர்வில், 742வது இடம் கிடைத்துள்ளது. சிறுவயதில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம். இதற்காக என் குடும்பத்தினர் உதவி புரிந்தனர். தற்போது, தேர்வில் வெற்றி பெற்றதால், ஐ.ஆர்.எஸ்., போன்ற மற்ற பணிகளுக்கு செல்லாம். இருப்பினும் மீண்டும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்.,தேர்ச்சி பெறுவேன் என்றார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற கிராமத்து விவசாயி மகள்

No comments:
Post a Comment