Translate

Friday, 21 November 2014

உண்மை ஒரு நாள் வெல்லும் – லிங்கா

உண்மை ஒரு நாள் வெல்லும்.
இந்த உலகம் உன் பெயர் சொல்லும்.
அன்று ஊரே போற்றும் மனிதன்,
நீயே நீயே நீயேடா!
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால்,
உண்மை மெதுவாய் பேசும்!
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே… கலங்காதே… கலங்காதே…
கரையாதே… கலங்காதே… கலங்காதே…
ராமனும் அழுதான்…!
தர்மனும் அழுதான்…!
நீயோ  அழவில்லை,
உனக்கோ அழிவில்லை!
சிரித்து வரும் சிங்கமுண்டு.
புன்னகைக்கும் புலிகள் உண்டு.
உரையாடி உயிர்குடிக்கும்,
ஓநாய்கள் உண்டு!
பொன்னாடை போர்த்து விட்டு,
உன்னாடை அவிழ்ப்பதுண்டு!
பூசெண்டில் ஒளிந்துநிற்கும்,
பூநாகம் உண்டு.
                                    பள்ளத்தில் ஓர்
                               யானை வீழ்ந்தாலும்,
                                    அதன் உள்ளத்தை
                                வீழ்த்திவிட முடியாது!

உண்மை ஒரு நாள்…..
சுட்டாலும் சங்கு நிறம்
எப்பொதும் வெள்ளையடா,
மேன்மக்கள் எந்நாளும்
மேன்மக்கள் தானே!
கெட்டாலும் நம் தலைவன்
எப்போதும் ராஜனடா!
வீழ்ந்தாலும் வள்ளல் கரம்
வீழாது தானே!
பொன்னோடு மண் எல்லாம் போனாலும் அவன் புன்னகையை  
கொள்ளை யிட முடியாது!
உண்மை ஒருநாள்….

---பாடல்: உண்மை ஒரு நாள் வெல்லும். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்: ஹரிசரண் படம்: லிங்கா


No comments:

Post a Comment