புணே, ஜூலை 28: உலகிலேயே இந்தியாவில் தொழுநோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 55
சதவீதமாக உள்ளது.
தொழுநோயாளிகள் இல்லாத நாடாக இந்தியா, கடந்த 2005-ம்
ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்பின், கடந்த 5 ஆண்டுகளில் தொழு நோயாளிகள்
எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து, இப்போது இந்தியா முழுவதும் இந்த நோய்
பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 800-ஆக உள்ளது. உலகம் முழுவதும்
இதன் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 474-ஆக உள்ளது. இதன்படி பார்த்தால், உலகிலேயே
இந்தியாவில் மட்டும் தொழுநோயால் 55 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித்
தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி, சர்வதேச தொழுநோய் ஒழிப்பு அமைப்பின் (ஐ.எல்.யு.) இந்தியாவுக்கான தலைவர் எஸ்.டி. கோகலே கூறுகையில், இந்தியாவில் தொழுநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. எனவே,இந்தப் பிரச்னையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே இந்திய அரசை எச்சரிக்கை செய்து, தொழுநோயை ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிர்பந்தித்துள்ளது என்றார். இந்த நிலையில், ஐ.எல்.யு. அமைப்பு சார்பில் தொழுநோய் பற்றிய 3 நாள் கருத்தரங்கம் அண்மையில் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழுநோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பலர் கலந்து கொண்டனர்.
Courtesy-Dinamani

No comments:
Post a Comment