உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் "சர்பிளஸ்&' ஆசிரியர்கள்
கணக்கெடுப்பு முடிந்து, அவர்களுக்கு கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளதால்
ஒருசில மாதங்களுக்கு முன் பல லட்சம் ரூபாய் கொடுத்து பணிமாறுதலான 7 ஆயிரம்
பட்டதாரி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
மாணவர், ஆசிரியர் விகிதாசாரம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்
மாதத்தில் "பணி நிரவல்&' நிகழ்ச்சி நடக்கும். ஒரு பள்ளியில் ஒரே
பாடத்துக்கு ஒன்றுக்கும் மேல் ஆசிரியர்கள் இருந்தால் அவர்களை
"சர்பிளஸ்&' ஆசிரியர்களாக கணக்கிட்டு, அந்த பள்ளிகளில் இருந்து வேறு
பள்ளிக்கு மாற்றப்படுவார்கள்.
நடப்பாண்டில், அனைத்து பாடங்களையும் சேர்த்து மாநிலம் முழுவதும் 7,100
"சர்பிளஸ்&' ஆசிரியர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு
மாநிலம் முழுவதும் ஜூலை 13, 14ல் (வெள்ளி, சனி) பணிமாறுதலுக்கான
"கவுன்சிலிங்&' அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழாசிரியர்கள் 1,440 பேரில் 400 பேருக்கு வேறு மாவட்டத்தில் பணி கிடைக்க
வாய்ப்புள்ளது. கணித ஆசிரியர்கள் 2000 பேரில் சுமார் 800 பேரும், அறிவியல்
ஆசிரியர்கள் (இயற்பியல், வேதியியல்) 2400 பேரில் 1300 பேரை "சர்பிளஸ்&'
ஆசிரியர்கள் என காட்டப்பட்டு, காலிபணியிடம் குறைவான காரணத்தால்
அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்காமல் அந்தந்த பள்ளிகளிலேயே நீட்டிக்கவும்
முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மனைவி ஓர்
இடத்திலும் நாங்கள் ஓர் இடத்திலும் பணியாற்றிவந்த நிலையில் லட்சக்கணக்கில்
பணம் கொடுத்து "டிரான்ஸ்பர்&' வாங்கினோம். "கவுன்சிலிங்&' தேதி
இன்னும் அறிவிக்கவில்லை. பதவி உயர்வு, பழைய, புதிய காலிப்பணியிடங்கள்
விவரங்கள் வெளியிடவில்லை. ஆனால், தாமதமாக "சர்பிளஸ்&' ஆசிரியர்களை
கணக்கெடுத்து, "கவுன்சிலிங்&' அறிவித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது: பள்ளிகளில்
"அட்மிஷன்&' முடிந்த நிலையில் "சர்பிளஸ்&' ஆசிரியர் கவுன்சிலிங்
மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "சர்பிளஸ்&' ஆசிரியர்கள்
மாவட்டத்துக்கு 5 முதல் 10 வரை காட்டப்பட்டு வந்தது. ஆனால், முதன்முறையாக
இப்போது 7,100 ஆசிரியர்கள் வரை கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் இல்லாத நிலையிலும்
அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்காமல் நீட்டிக்கும் முடிவும் ஆசிரியர்களுக்கு
எதிரானது. இந்நிலையில் டி.இ.டி., தேர்வு மூலம் எடுக்கும் 6,500 ஆசிரியர்களை
இந்த அரசு எப்படி பணி நியமனம் செய்யப்போகிறது என்று தெரியவில்லை, என்றார்.
COURTESY-DINAMALAR
COURTESY-DINAMALAR
No comments:
Post a Comment